www.garudavega.com

வெளியான "RRR" பட பாடல்!.. பிரம்மாண்ட மியூசிக் டைரக்டருடன் இணைந்த அனிருத்! பட்டையை கிளப்பும் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

SS ராஜமௌலி இயக்கத்தில் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (ரத்தம் ரணம் ரவுத்திரம்).

Natpu RRR Movie Song Maragadhamani Anirudh SS Rajamouli

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் நடித்த பாகுபலி திரைப்படத்தை இயக்குநர் SS ராஜமௌலி இயக்கினார். இமாலய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், வெகுஜன மக்களிடம் ரீச் ஆனதிலும் சரி ஹிட் அடித்தது.

இந்த படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். முன்னதாக என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி, ‘யம தொங்கா’ படத்தை இயக்கியிருந்தார். இதேபோல் ராம் சரண் நடிப்பிலான ‘மஹதீரா’ படத்தையும் ராஜமௌலி இயக்கியிருந்தார்.

இதில் ராஜமௌலியின் மஹதீரா, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைத்தவரும், ராஜமௌலியின் ஆதர்ச இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.மரகதமணி என்கிற எம்.எம்.கீரவாணி, தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக இசையமைத்த நட்பு எனும் பாடல், ஃபரண்ட்ஷிப் தினமான இன்று வெளியாகியுள்ளது.

Natpu RRR Movie Song Maragadhamani Anirudh SS Rajamouli

அனிருத் பாடி நடித்துள்ள இந்த பாடலின் மியூசிக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எஸ்.எஸ்.மரகதமணி இடம் பெறுகிறார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: குஷ்பு.. நடிகை.. அரசியல் பிரமுகர்.. சீரியலில் செம்ம கெஸ்ட் ரோல்!.. கூடவே பிரபல பிக்பாஸ் நடிகர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Natpu RRR Movie Song Maragadhamani Anirudh SS Rajamouli

People looking for online information on Anirudh, Jr ntr, Jr.NTR, Junior NTR, Maragathamani, MM Keeravani, Natpu RRRSongs RRRMovie, Ram Charan, SS Rajamouli will find this news story useful.