www.garudavega.com
iTechUS

நானியின் மாறுபட்ட மிரட்டலான நடிப்பில் தசரா..டிரெண்டாகும் தமிழ் டீஸர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி நடிக்கும் தசரா படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Nani Keerthy Suresh Dasara Movie Teaser Released

                   Images are subject to © copyright to their respective owners.

Also Read | குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் & பிரேமலதா.. மகன்களுடன் கேப்டனின் LATEST PHOTOS!

நேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமாக  'தசரா' அமைந்துள்ளது.

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான  சிங்கிள் பாடல் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

Nani Keerthy Suresh Dasara Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

Nani Keerthy Suresh Dasara Movie Teaser Released

Images are subject to © copyright to their respective owners.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. நிலக்கரி சுரங்கம் பிண்ணனியில் இந்த டீஸர் அமைந்துள்ளது. டீஸரில் நானியின் மாறுபட்ட மிரட்டலான தோற்றமும் ஆக்ரோஷமான நடிப்பும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

24 மணி நேரத்தில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் பக்கத்தில் இந்த டீஸர் கடந்துள்ளது. மேலும் டீஸர் டிரெண்டிங்கிலும் முன்னணியில் உள்ளது.

Also Read | தளபதி 67 படத்தின் ஒன்லைன்.. கதை கேட்ட பின் சஞ்சய் தத் சொன்ன செம விஷயம்! வைரல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nani Keerthy Suresh Dasara Movie Teaser Released

People looking for online information on Dasara, Dasara Movie Teaser, Keerthy Suresh, Nani will find this news story useful.