தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
Also Read | விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.. வைரலாகும் போட்டோஸ்..!
தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார். பின்னர் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு தனுஷின் லுக் உள்ள படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செல்வராகவன் வெளியிட்ட புதிய போஸ்டரில் "விரைவில் திரையரங்குகளில்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் 'அப்டேட் விரைவில்' என செல்வராகவன் பதிவிட்டுள்ளார். பனி சூழ்ந்த நிலையில் போஸ்டரில் தனுஷ் உடன் நடிகை எலிசபெத் தோன்றியுள்ளார்.
Update soon 😍@theVcreations @dhanushkraja @thisisysr @omdop @ElliAvrRam pic.twitter.com/WcVq9Eh0wu
— selvaraghavan (@selvaraghavan) August 31, 2022
Also Read | ராமேஸ்வரம் கோயில் யானையுடன் நடிகர் சசிகுமார்.. அவரே பகிர்ந்த அருமையான போட்டோ!