பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் கலந்துகொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து.
பெற்றோர் இவர் மீது புரிதல் இல்லாமல் மனநல மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி அங்கிருந்து தப்பி, கோர்ட்டின் தீர்ப்பு மூலம் விடுதலை பெற்றது வரை நமீதா மாரிமுத்து அனைத்தையும் பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியிருந்தார்.
குறிப்பாக, "இதுவரைக்கும் 25 படங்கள்ல ஒரு பொண்ணா நடிச்சிருக்கேன்!.. யாருக்குமே தெரியாது", "ஆம்பளை ஹோம்லயா?.. பொம்பள ஹோம்லயா?".. என கோர்ட்டில் கிடைத்தார்கள்", "எந்த திருநங்கையாச்சும் பலாத்காரம் பண்ணிருக்காங்களா?.. இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துருக்காங்களா?" என பல கேள்விகளை முன்வைத்த நமீதா மாரிமுத்து தாமதமாக தன் பெற்றோர் தன்னை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது நமீதா மாரிமுத்துவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே உரசல் ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகினர். இருப்பினும் குறிப்பிட்ட ஒருநாள் எபிசோடில் நடந்தது என்ன என்பது குறித்த காட்சிகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நமீதா தம்முடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் ஏழ்மையான குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை நமீதா மாரிமுத்து வழங்கி மகிழ்ச்சியூட்டுகிறார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே தம்முடைய சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்வதாகவும் குறிப்பிட்டார்.