இந்நிலையில் பிக்பாஸ்-க்கு செல்ல பெயர் வைக்கத் தொடங்கிவிட்டனர் நமீதாவும் இசைவாணியும்.
ஆம், நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரே திருநங்கை. மாடலாகவும், மாற்றுப் பாலின சமூக ஆக்டிவிஸ்டாகவும் இருக்கும் நமீதா மாரிமுத்து தன்னை தன் பெற்றோர் புரிந்துகொண்டதாக நெகிழ்ந்தபடி முதல் நாள் அறிமுகம் ஆயிருந்தார். மேலும் ரிலேஷன்ஷிப்பை பொறுத்தவரை தன்னை பாலின ரீதியாக காயப்படுத்திவிட்டு விலகிவிடுவார்களோ என்கிற பயம் முன்பே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அவரை அறிமுகப்படுத்தி பேசிய கமல்ஹாசன், நமீதா மாரிமுத்து போன்றோரை திருநங்கை என அழைக்கிறார்கள். ஆனால் அவர்களை பால்பேதம் கடந்தோர் அல்லது பால் கடந்தோர் என அழைக்கலாம் என்பது தன் தாழ்மையான கருத்து என தெரிவித்திருந்தார்.
இதேபோல், மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த இசைவாணி, தன் அப்பாவை எந்த மேடையிலும் பாட விடாமல் ஒடுக்கியதாகவும், தான் கூட அப்படியான புறக்கணிப்புகளை சந்தித்து வருவதாகவும் இருப்பினும் பிபிசியின் 100 இந்திய பெண்களுக்கான அங்கீகார உள்ளிட்டவற்றால் தான் இன்னும் தன்னம்பிக்கையோடு வலம் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், பிக்பாஸுக்கு கண்மணி என்று பெயர் சூட்டி இருக்கிறார் நமீதா மாரிமுத்து. கண் கொண்டு அனைவரையும் பார்ப்பது மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் அங்கு நடப்பதை வெளிஉலகிற்கு காட்டுவது என்பதால் பிக்பாஸ்க்கு கண்மணி என்று பெயர் சூட்டுவதாக நமீதா ஒரு விளக்கம் கூறினார். மேலும் கேமராவை பார்த்து சரமாரியாக பிக்பாஸ்க்கு தமது அன்பு முத்தங்களை பறக்கவிட்டார்.
இதேபோல், இசைவாணி, பிக்பாஸை ‘வாத்தியாரே’ என அழைக்கத் தொடங்கி, அதுதான் பிக்பாஸ்க்கு தான் சூட்டும் செல்லப்பெயர் என குறிப்பிட்டார். இதைப் பார்த்த பலரும் சார்பட்டா பரம்பரை பட ‘ரங்கன் வாத்தியார்’ எஃபெக்டா? என கமெண்டுகளை கொடுத்து வந்தனர். அண்மைக் காலமாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யா, பசுபதியை அழைத்துச் செல்லும் வாத்தியாரே மீம்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.
பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருந்தார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் ஒரே பெண் பாடகராக திகழ்பவர் இசைவாணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து இவர்களுடன் இருந்த ஸ்ருதி ‘தலைவர்’ என்று பிக்பாஸை அழைக்கப்போவதாக குறிப்பிட, அவரை அமோதித்த இசைவாணி, “வா தலைவா...” என கூறிவிட்டு, ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வா ஸ்ருதி என ஸ்ருதியை அழைத்துக்கொண்டு அங்கிருருந்து நகர்ந்துவிட்டார்.
ஸ்ருதியும் ஒரு மாடல் தான். அக்ஷராவுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ருதியும் முதல் நாள் பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசன் கேட்டதற்கு இணங்க ஃபேஷன் ஷோவில் வருவது போல ரேம்ப் வாக் செய்து காட்டினார். அதன் பின்னர் மாடல்கள் என்பவர்கள், சந்தையில் வடிவமைக்கப்படும் புத்தம் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு நடந்து வந்து, அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர்கள் என கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.