பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன் ரவுண்ட் வந்தது. இதில் பிக்பாஸ் வீட்டை விட்டு நாடியா எலிமினேட் செய்யப்பட்டார். மலேசிய தமிழரான இவர், சீனாவை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய தாயாரின் துன்புறுத்தலில் இருந்து விடுதலை ஆனதாக குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் அழகுத்துறையில் சாதித்த நாடியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறியதும் தன்னுடைய அனுபவங்களை குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளை ரவீந்தர் முன்வைத்தார்.
அந்த வகையில் பாவனி பற்றிய கேள்வியில், “பாவனியை பார்க்கும் பொழுது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது..? இந்த பொண்ணு போடும் டிராமாவுக்கு இந்த பொண்ணு சரியாக நம்மிடம் மாட்டும். அப்போ வச்சுக்கலாம் என்று தோன்றுதா? ஐயோ பாவம் எப்போது பார்த்தாலும் அழுது கொண்டு.. எப்ப பார்த்தாலும் கஷ்டப்பட்டு, பேசிக்கொண்டு.. அங்கு இருப்பவர்களிலேயே மிகவும் கஷ்டமும், துயரமும், பிரச்சனையும் தன் வாழ்க்கையில்.. தனக்கு மட்டுமே இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு ஆளாக பாவனி பேசுகிறாரா? இல்லை? அப்படித்தான் அவர் தன்னை காட்டிக் கொள்கிறார் என்பது போல் தோன்றுகிறதா? இல்லை சார் இவங்கள நம்பிடாதீங்க.. அவங்க..... என்பது போல் உங்களுக்கு தெரிகிறதா?” என்று ரவீந்தர் கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த நாடியா சாங் சிரித்துக்கொண்டே.. “சார் நம்பிடாதீங்க.. அப்படித்தான் தோன்றியது” என்று சிரிக்கிறார். முன்னதாக அபிஷேக் மற்றும் அக்ஷரா இருவரிடமும் தனக்கு சண்டை வந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்த நாடியா சாங், அபிஷேக் மற்றும் பாவனி பேசிக்கொண்டிருப்பதை அவ்வப்போது தூரத்திலிருந்து பார்த்தபோது, பாவனி பின்னால் பேசக்கூடியவர் என்பதை உணர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பேசியவர், “நிச்சயமாக என்னையும் பற்றி பாவனி பின்னால் பேசுவார் என்பதையும் நான் உணர்ந்தேன். கடைசி சீசனில் ‘விஷ பாட்டில்’ என்று சொல்லியிருந்தார்களே.. அப்படித்தான் கடைசி 3 நாட்கள் பாவனியை நான் பார்த்தேன். ஆனால் நிறைய இடத்தில் பாவனி மிகவும் சோகமாகவும், அந்த மாதிரி பேசும் பொழுது நான் சொல்வேன்.. உங்களுக்கு ஒருவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் முகத்துக்கு நேரே அவரிடம் சொல்லிவிடுங்கள்.. என்று சொல்லிவிட்டேன்.
அப்போது அவர், ‘நான் அதையெல்லாம் பார்க்க மாட்டேன். முகத்துக்கு நேராக பேசிவிடுவேன்’ என்று சொன்னார். ஆனால் நிறைய இடத்தில் அவர் பின்னாடி தான் நிறைய பேசி இருக்கிறார். நான் நிறைய பார்த்திருக்கிறேன் என்னிடமும் நிறைய அப்படி பேசி இருக்கிறார்.” என குறிப்பிட்டுள்ளார்.