www.garudavega.com

BREAKING: தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை தகர்த்த 'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாரி' பாடல்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் திரையுலகுக்கு வந்து இன்றுடன் (03.08.2021) 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM, #29YrsOfInvincibleTHALA என்ற ஹேஸ்டேக்களை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

naanga vera mari thala ajith song breaking record

இந்த 29வது வருடத்தை முன்னிட்டு 'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாரி' என தொடங்கும் சிங்கிள் பாடல் நேற்று (02.08.2021) இரவு 10.45 மணிக்கு வெளியானது.

naanga vera mari thala ajith song breaking record

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர்.

naanga vera mari thala ajith song breaking record

தல அஜித் அடிக்கடி கூறும் குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு போன்ற ரசிகர்களுக்கு அறிவுரைக்கூறும் வாசகங்களை வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது.

naanga vera mari thala ajith song breaking record

வெளியானது முதல்லே யூடியூப்பிலும், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சிங்கிள் பாடல்களின் முந்தைய சாதனைகளை தகர்த்தும் வருகிறது. குறிப்பாக தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி, வெறித்தனம் பாடல்களின் சாதனைகளை தகர்த்துள்ளது. தற்போது வரை வெளியான 13 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 860 K லைக்ஸ் உடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

naanga vera mari thala ajith song breaking record

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடும் விதமாக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நேரில் சந்தித்து கேக் வெட்டி அஜித் ரசிகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர். 

 

BREAKING: தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை தகர்த்த 'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாரி' பாடல்!!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Naanga vera mari thala ajith song breaking record

People looking for online information on Ajith Kumar, Bigil Tamil, Master Tamil, Valimai, Vijay, Yuvan Shankar Raja will find this news story useful.