மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிக்கும் பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Also Read | 500க்கும் மேற்பட்ட படங்கள்… பழம்பெரும் நடிகை ’ரங்கம்மா பாட்டி’ மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!
மிஷ்கினின் படங்கள்…
இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய தனித்துவமான படமாக்கல் பாணியால் சிறந்த படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அவர் படங்களின் கேமரா கோணங்களில் இருந்து பின்னணி இசை வரை தனித்துவமான ஸ்டைலில் உருவாக்கப்படும். மிஷ்கின் படங்களில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பில் நாம் மிஷ்கினைப் பார்க்க முடியும்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்கள் வரிசையில் 2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்தது. தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களில் தனித்துவமான படமாக இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
நல்ல பிசாசு…
வழக்கமாக தமிழ் சினிமாவில் பேய் படங்கள் பயமுறுத்தும் த்ரில்லர் வகையிலோ அல்லது காமெடி வகையிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மிஷ்கின் தன் படத்தில் நல்ல பிசாசுவைக் காட்டினார். தன் சாவுக்குக் காரணமானவனை விரும்பும் பிசாசாகவும், அவனின் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு பிசாசாகவும் உருவாக்கி இருந்தார். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பிசாசு 2…
இந்நிலையில் இப்போது மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கிறார். ஆண்ட்ரியா, பூஜா, சந்தோஷ் உள்ளிட்டவர்களோடு விஜய் சேதுபதியும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
கவனம் ஈர்த்த டிரைலர்…
இந்நிலையில் தற்போது பிசாசு 2 படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக மிஷ்கின் படங்களில் சிறப்பம்சமாக இருக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இந்த டிரைலரிலும் சிறப்பாக அமைந்துள்ளது. பேய் த்ரில்லர் படங்களுக்கே உரிய ஸ்டைலில் இருளில் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. புதிர்த் தன்மயுடன் இருக்கும் wide காட்சிகளும் சில close up காட்சிகளும் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளன. காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் விதமாக கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை அமைந்துள்ளது. விறுவிறுப்பான இந்த டிரைலர் படத்தை பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8