www.garudavega.com

திருமூர்த்தி பாடிய பாட்டு.. கேட்டதும் நெகிழ்ந்து போன மிஷ்கின் கொடுத்த GIFT!!.. MYSSKIN FANS FESTIVAL!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி திரைப்படங்கள் இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின்.

mysskin overwhelmed by thirumoorthy song in fans festival

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார்.

தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்த நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இயக்கம் மட்டுமில்லாமல், சில படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ள இயக்குனர் மிஷ்கின், தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார்.

mysskin overwhelmed by thirumoorthy song in fans festival

இந்த நிலையில், Behindwoods சேனல் சார்பில் நடத்தப்பட்ட 'Mysskin Fans Festival' நிகழ்ச்சியிலும் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். இதில், பல சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்கள் முன்னிலையில் மிஷ்கின் தெரிவித்திருந்த நிலையில், அவருக்காக பார்வை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய பாடல்களும், பதிலுக்கு மிஷ்கின் கொடுத்த கிஃப்ட் தொடர்பான நிகழ்வும் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

mysskin overwhelmed by thirumoorthy song in fans festival

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பாடகரான திருமூர்த்தி, மிஷ்கினிடம் பேசுகையில், "உங்களுடைய படங்களுக்கு நான் பெரிய ஃபேன் சார். நீங்க பண்ண எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல ரொம்ப ஸ்பெஷலா என்ன பீல் பண்ண வச்ச படம்னா 'நந்தலாலா' அப்புறம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. எனக்கு ரொம்பவே ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துச்சு" என கூறியபடி மிஷ்கின் பாடிய பாடல்கள் உட்பட மூன்று பாடலை பாட போவதாக குறிப்பிட்டு அந்த பாடல்களை பாடவும் செய்கிறார் திருமூர்த்தி.

பாடல்களை பாடி முடித்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தொடர்ந்து பேசிய திருமூர்த்தி, "படத்தில் வரும் ஹீரோக்கள் குறித்து அவர்கள் எப்படி உடை அணிந்துள்ளார்கள், எப்படி வருகிறார்கள் என்பது பற்றி நான் எனது நண்பர்களிடம் கேட்பேன். அப்போது ஒரு முறை மிஷ்கின் சார் பற்றி கேட்கும் போது, அவர் எப்போதும் கண்ணாடியுடன் தான் இருப்பார் என கூறினார்கள். நான் எப்பவுமே கண்ணாடி போட்டதில்லை சார். உங்களுடைய கண்ணாடியை ஒரு முறை போட்டு பார்க்கலாமா?" என மிஷ்கினிடம் சொன்னதும், தனது கண்ணாடியை மட்டுமில்லாமல் வாட்ச்சையும் எடுத்து திருமூர்த்தி கையில் போட்டு விடுகிறார் மிஷ்கின்.

mysskin overwhelmed by thirumoorthy song in fans festival

இவை இரண்டையும் பரிசாக மிஷ்கின் கொடுக்க, தொடர்ந்து பேசும் அவர், "எனக்கு இந்த தருணத்தை எப்படி விளக்குவது என தெரியவில்லை. ஒரு கலைஞன் அப்படின்னு சொல்றதுக்கு நான் ரொம்ப பெருமைப்படுறேன். இதுக்கு தாங்க எல்லாமே. தேங்க் யூ" என நெகிழ்ந்து போய் மிஷ்கின் தெரிவிக்கிறார்.

திருமூர்த்தி பாடிய பாட்டு.. கேட்டதும் நெகிழ்ந்து போன மிஷ்கின் கொடுத்த GIFT!!.. MYSSKIN FANS FESTIVAL!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin overwhelmed by thirumoorthy song in fans festival

People looking for online information on Mysskin, Thirumoorthy will find this news story useful.