விஷால்-மிஷ்கின் கருத்து வேறுபாடு - துப்பறிவாளன்-2வில் இருந்து விலகிய மிஷ்கின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துப்பறிவாளன் 2-வில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

விஷாலின் துப்பறிவாளனில் இருந்து விலகிய மிஷ்கின் | mysskin moves out of vishal's thupparivalan

மிஷ்கின் இயக்கத்தில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கொலை கும்பலை துப்பறியும் க்ரைம் ஜானரில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் வெளியேறியதாக கூறப்படுகிறது. துப்பறிவாளன்-2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் சில நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் பட்ஜட் விஷயத்தில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து மிஷ்கின் விலகியதாகவும், மீதம் இருக்கும் படப்பிடிப்பை விஷாலே டைரக்ட் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக இருந்த விஷால் - மிஷ்கின் காம்போ பிரிந்தது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஷாலின் துப்பறிவாளனில் இருந்து விலகிய மிஷ்கின் | mysskin moves out of vishal's thupparivalan

People looking for online information on Mysskin, Thupparivaalan 2, Vishal will find this news story useful.