தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி திரைப்படங்கள் இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின்.
Also Read | Mysskin : “கிளைமாக்ஸில் 100 பேர அடிக்கணும்”.. சிம்புவுக்கு கதை சொன்ன மிஷ்கின். ? Exclusive
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்த நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
இயக்கம் மட்டுமில்லாமல், சில படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ள இயக்குனர் மிஷ்கின், தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், Behindwoods சேனல் சார்பில் நடத்தப்பட்ட 'Mysskin Fans Festival' நிகழ்ச்சியிலும் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். இதில், பல சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்கள் முன்னிலையில் மிஷ்கின் பேசியுள்ளார்.
அந்த வகையில் தமது படங்களில் மது குடிப்பது தொடர்பான பார் பாடல்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த மிஷ்கின், “எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என பெரும் நடிகர்களின் படங்களை பார்க்கிறார்கள். ஆனால் அடிப்படையில் நல்ல விதமாக வளர்ந்தவர்கள் திரையில் ஹீரோக்கள் செய்பவற்றால் inspiration ஆகி வீரச் செயல்கள் புரிய விரும்புவார்கள். இதே ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கிறது. பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசுகிறான் ஒரு இளைஞன். இவர்கள் அடிப்படையில் தவறாக வளர்ந்தவர்கள். அவரும் வெப் சீரிஸ்களை பார்த்து instigation - தூண்டுதலுக்கு ஆளாகியுள்ளார்.
என் படத்திலும் பார் ஒரு மோசமான இடம்தான். ஆனால் அங்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. எனவே அதை பார் Anthem என சொல்கிறேன். ஒரு வயலினிஸ்ட் தண்ணி அடிச்சுட்டு இளையராஜா பாடலை உட்கார்ந்து பாடிட்டு இருப்பாரு. அவருக்கும் வீட்டில் கஷ்டம் இருக்கும். ஒரு பெண் ஒரு சாராய கடையில் ஏறி மது வாங்கி குடிக்கும்போதெல்லாம் எல்லா ஆண்களும் தோத்து போயிடுறாங்க.. அவள் போதைக்காக குடிக்கவில்லை. அவ்வளவு வலி அவளுக்கு. வலியை மறக்குறதுக்கான இடம் என அந்த பாட்டில் சொல்லி இருப்பேன்.. ஆனால் அந்த வலியை மாத்துறது எப்படினு ஹீரோ செய்வான். முகமூடி படத்துல அதை சொல்லிருப்பேன். அஞ்சாதேவில் ஒரு ரவுடியாக இருக்கும் பையன் திருட்டு தனமாக போலீஸ் ஆகி, ஆளே மாறிடுவான்..
சைக்கோ படத்தில் ஒரு 14 கொலை செய்த கொலைகாரனை பற்றிய விவரத்துக்காக வன்முறை காட்சியை வைத்திருப்பேன். அந்த சுதந்திரம் எனக்கு சினிமா கொடுத்தது. மரணம் மிக முக்கியமான டாப்பிக். அது விளைவை உண்டு பண்ணும்தான் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரு கொலைகாரன் எப்படி உருவாகிறான், அவனுக்கு கிடைக்காத அன்பை பற்றி நான் பேசினேன். ஆனால் 20 வயதை கடந்த ஒருவன் என் படத்தை பார்த்து கொலை செய்யும் முடிவுக்கு வந்தால் நான் ஒன்றுமே செய்ய முடியாது.” என பேசினார்.
Also Read | Mysskin : “நான் கதை சொன்னா விஜய் பயந்து தான் கேப்பாரு”.. மிஷ்கின் கலகலப்பான பேட்டி.. Exclusive