www.garudavega.com
iTechUS

"என்னால முடியும்".. CONFIDENT-ஆ பேசிய மைனா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் வார்த்தை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற நிலையில் வீட்டில் பல நெகிழ்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

Myna talking about her confidence biggboss congrats

Also Read | "என் அமுது ஒரு கலைஞன்".. அமுதவாணனை கண்கலங்க செய்த பிக்பாஸ்.. நெகிழ்ந்துபோன போட்டியாளர்கள்..!

90 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய சீசன் 6 ஃபைனலை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் வழக்கம்போல போட்டியில் கமல் தோன்றி இருந்தார். அப்போது கடந்த வாரம் நடந்தவை குறித்து கமல் பேசியிருந்தார். அப்போது எவிக்ஷன் நேரத்தில் ADK வெளியேறுவதாக அறிவித்தார் கமல். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்தனர். அதன்பிறகு, ADK -விற்கு தொப்பி ஒன்றையும் கமல் பரிசாக அளித்திருந்தார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர். இதனால் பிக்பாஸ் வீடு சுவாரஸ்யமாக மாறியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, அவ்வப்போது போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.

இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் பண மூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பண மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். பின்னர் கதிர் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் பணப் பெட்டி அறிமுகமாகியுள்ளது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பணத்துடன் வெளியேறலாம் என இப்போதும் பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மைனா பிக்பாஸ் வீட்டுக்குள் கலந்துகொண்ட டாஸ்க்குகள் பற்றிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய டாஸ்க் பற்றிய வீடியோக்களும் திரையிடப்படுகின்றன.

இதனை கண்டு ஆச்சர்யப்படும் மைனா, நெகிழ்ச்சியுடன் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கிறார். அப்போது,"நம்மள சுத்தி இருக்க 4 பேர் முடிவு எடுக்க கூடாது. நம்ம எப்படி வாழணும்னு. நம்ம தான் டிசைட் பண்ணனும். என்னால முடியும்னு நம்பிக்கை இருந்தது" என்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இந்த மைனா எல்லா கவலைகளையும் களைந்து சுதந்திரமாக பறக்க எனது வாழ்த்துகள்" என்கிறார். இதனை மைனா கண்கலங்கியபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Also Read | "முந்துன சீசன்ல வந்த சில பேரை எனக்கு புடிக்காது".. காரணங்களை லிஸ்ட் போட்ட ஜிபி முத்து!!..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Myna talking about her confidence biggboss congrats

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Myna Nandhini will find this news story useful.