பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகையான மைனா நந்தினிக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியை அவரது கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். திரையுலகை சேர்ந்தவர்களும், நடிகையின் நண்பர்களும் சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தினர்.'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் பிரபலமடைந்த அவர் தொடர்ந்து 'கலக்கப் போவது யாரு', அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கிருவர் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரை குழந்தையின் எந்த புகைப்படத்தையும் அவரும், அவரது கணவரும் வெளியிட வில்லை. சமீபத்தில் குழந்தையுடன் இருக்கும் ஒரு அழகிய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்து 1 மாதம் ஆன நிலையில் அவர் தன் குழந்தையின் பெயரை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் தன் குழந்தைக்கு 'துருவன்' என்று பெயரிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.