www.garudavega.com

மைனா நந்தினியின் கணவர் இப்பேற்பட்ட பிரபல நடிகரின் வாரிசா? ரியாலிட்டி ஷோவில் எமோஷன் ஆன 'யோகி'!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சக்கைபோடு போட்டது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அண்மையில் நடைபெற்று நிறைவடைந்தது.

myna nandhini husband yogi this popular actors grandson

இந்த நிகழ்ச்சியின் நிறைவு எபிசோடில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கனி டைட்டில் கார்டு வென்றார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மூலம் புகழ், அஸ்வின், சிவாங்கி உள்ளிட்ட பருவம் அடைந்தனர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி பிரம்மாண்டமாக மீண்டும் ஒளிபரப்பு செய்து வருவது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை தான் விஜய் டிவி பொருத்தவரை பிக்பாஸ் 4 சீசன்கள் நிறைவடைந்திருக்கிறது.

myna nandhini husband yogi this popular actors grandson

இந்த நிலையில் இன்னொரு சென்சேஷனலான நிகழ்ச்சியாக இப்போது Mr & Mrs சின்னத்திரை 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இந்த எபிசோடை மா.கா.பா ஆனந்த் மற்றும் ‘பிக்பாஸ்’ அர்ச்சனா தொகுத்து வழங்கினார். இதில் பாடகர்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கணவன் மனைவியாக கலந்துகொண்டனர். குறிப்பாக தீபா அக்கா, சீரியல் நடிகை மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் யோகி தமது மனைவி மைனாவிடம் புரோபோஸ் செய்த நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது.

myna nandhini husband yogi this popular actors grandson

அப்போது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி அமர்ந்திருந்தனர். அதில் கோபிநாத் கூறும்போது சிவாஜி கணேசனுடன் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்த பிரபல பழம் பெரும் நடிகர் ராமதாஸ் தான்  யோகியின் (மைனாவின் கணவர்) தாத்தா என்பதை ரிவீல் செய்தார்.

myna nandhini husband yogi this popular actors grandson

அப்போது யோகி, “நான் என்னென்னவோ முயற்சி செய்தேன்.. திரைத்துறைக்கு வரும் யோசனையே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் என் தாத்தா திரைத் துறையைச் சார்ந்தவர் என்பது எனக்கு தோன்றவே இல்லை.

myna nandhini husband yogi this popular actors grandson

இப்போது திரைத்துறையில் வளரும் இந்த வேளையில் தாத்தா உடன் இல்லை என தோன்றுகிறது!” என்று எமோஷனலாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில், அதாவது சனி ஞாயிறுகளில் ஒளிபரப்பாகிறது.

ALSO READ: மறைந்த நகைச்சுவை நடிகர் 'விவேக்!'.. வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்த 'தளபதி' விஜய்!

மற்ற செய்திகள்

Myna nandhini husband yogi this popular actors grandson

People looking for online information on MrMrsChinnathirai, VijayTelevision will find this news story useful.