www.garudavega.com

"நீங்க வெளிய வந்த அப்புறம்".. ஷிவின்கிட்ட மைனா நந்தினியின் கணவர் சொன்ன விஷயம்!!.. BIGG BOSS TAMIL 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Myna Nandhini husband yogesh to shivin bigg boss 6 tamil

Also Read | "அட, மீனாவா இப்டி?".. அசிங்கப்படுத்திய அப்பாவை லெஃப்ட், ரைட் வாங்கி சவால்! அதிர்ந்த குடும்பம்..

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

முன்னதாக, பிக்பாஸ் வீடு கடந்த வாரம் ஆரம்ப பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும், அதன் பின்னர் கல்லூரி ஆகவும் மாறி இருந்தது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்த விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது.

Myna Nandhini husband yogesh to shivin bigg boss 6 tamil

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினரின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்ததால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது. இந்த நிலையில், மைனா நந்தினியின் கணவரான யோகேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் Freeze டாஸ்க்கின் போது என்ட்ரி கொடுத்துள்ளார்.

Myna Nandhini husband yogesh to shivin bigg boss 6 tamil

தனது குழந்தை மற்றும் கணவர் யோகேஷ் ஆகியோர், உள்ளே நுழைந்ததும் மைனா சற்று எமோஷனல் ஆகவும் மாறி இருந்தார். இதனைத் தொடர்ந்து, மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார் யோகேஷ். மறுபக்கம், மனைவி மைனாவுக்கும் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருவது குறித்து நிறைய அறிவுரைகளை வழங்கி இருந்தார். அதே போல, அவர்களின் குழந்தையுடன் அசிம் விளையாடி இருந்தது அதிக கவனம் ஈர்த்திருந்தது.

Myna Nandhini husband yogesh to shivin bigg boss 6 tamil

இந்த நிலையில், போட்டியாளர் ஷிவினிடம் யோகேஷ் பேசிய விஷயங்கள், அதிக வைரலாகி வருகிறது. முதல் வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் மைனா நந்தினி நுழைந்த போது அவரிடம் பேசிய ஷிவின், உங்கள் கணவர் யோகேஷை எனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதே போல மைனாவும் பதிலுக்கு, எனது கணவருக்கும் உங்களை மிக பிடிக்கும் என கூறி இருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது Freeze டாஸ்க்கில் வருகை தந்த யோகேஷ், ஷிவினிடம் பேசுகையில், "ஷிவின்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். வெளியே வந்தாலும் ஒரு ஃப்ரண்டா நான் இருப்பேன்" என கூறியபடி ஷிவினின் கையை குலுக்க போகிறார். அப்போது மைனா இதனை ஜாலியாக தடுக்க, பின்னர் அவரை கட்டியணைத்து வாழ்த்தவும் செய்கிறார் யோகேஷ். அவரது வார்த்தைக்கு ஷிவினும் நன்றியை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read | "என்னை சுத்தி சர்ச்சைகள் வந்ததும்.. இந்த இடத்துக்கு நான் வர".. CWC அஸ்வின் Open டாக்!!.. Exclusive

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini husband yogesh to shivin bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Myna Nandhini husband yogesh, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.