விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் முத்தையா முரளிதரன். இவர் தற்போது 800 என்கிற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் இலங்கை அணி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தழுவி உருவாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என சினிமா நட்சத்திரங்கள் முதல் பலரும் கோரிக்கை வைத்து வருகிறனர்.
இதனிடையே தற்போது முத்தையா முரளிதரன் இத்திரைப்படம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''என் மீதுள்ள தவறான புரிதலால், விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலகுமாறு அழுத்தம் வருவதை அறிகிறேன். என்னால் ஒரு தலைச்சிறந்த கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை. இதனால் அவரது கலைப்பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இத்திரைப்படத்தில் இருந்து விலகுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்'' என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து முரளிதரனின் அறிக்கைக்கு, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ''நன்றி., வணக்கம்'' என பதிவிட்டுள்ளார்.