பிக்பாஸ் தமிழ் 5வது சீசன் நிகழ்ச்சியின் 15-வது நாள் எபிசோடு ஒளிபரப்பானது.
அதன்படி இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டனை தீர்மானிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த டாஸ்கிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிபி, பாவனி, இசைவாணி, இமான் அண்ணாச்சி மற்றும் ராஜூ என்று பிக்பாஸ் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒலிக்கும் ஒரு சத்தம் வந்தவுடன் சிலை போல் நிற்க வேண்டும். அதன்பிறகு மீண்டும் ஒரு சத்தம் வரும் வரை அவர்களை பிக்பாஸ் வீட்டின் இதர போட்டியாளர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி அவர்களின் உணர்வுகளை சோதிக்கலாம், கவனச் சிதறலுக்கு உள்ளாக்கலாம் என்பதுதான் டாஸ்க்.
அப்படி ராஜூவின் கண்முன்னே அபிஷேக் மற்றும் நிரூப் இருவரும் பெண்களைப் போல ஆடைகளை அணிந்துகொண்டு அலப்பறை செய்தனர். இதேபோல் சின்ன பொண்ணு அக்கா வந்து ராஜூவிடம், “எனக்கு டிஸ்லைக் போட்டுவிட்டு அக்ஷராவுக்கு லைக் போட்டியிடா?” என்றெல்லாம் பேசினார்.
இப்படி போட்டியாளர்கள் ஏகத்துக்கும் விளையாட்டாக, தங்கள் மனதுக்குள் இருப்பதை எல்லாம் ராஜூவிடம் பேசினர். ஆனால் எதையும் கவனிக்காமல் நேரே மேலே பார்த்துக் கொண்டு ராஜூ நின்று கொண்டிருந்தார். எனினும் இந்த போட்டியின் முடிவில் ஒருவழியாக சிபி ஜெயித்துவிட்டார்.
இந்த போட்டியில் ஜெயித்த பிறகு சிபி, பிக்பாஸ் வீட்டுக்கு கேப்டன் ஆனார். உடனே அந்த வீட்டுக்குள் மீண்டும் சில மாற்றங்களை சிபி செய்தார். அதன்படி பாத்திரம் கழுவுவது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என ஒவ்வொரு பணிகளுக்கான ஹவுஸ்மேட்ஸ்களை மாற்றி மாற்றி நியமித்தார்.
அந்தவகையில் ராஜூவுக்கு தற்போது பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய பொறுப்பு தரப்பட்டது. இதனை அடுத்து ஹவுஸ்மேட்ஸ் தூங்கும்பொழுது அந்த படுக்கை அறையை சுத்தம் செய்யும்போது ராஜூ வேற லெவலில் புலம்பியிருக்கிறார்.
குறிப்பாக, “நான் இந்த வீட்டைக் கூட்டினேனனு சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். நாங்க ராஜ பரம்பரை.. முத்து படத்தில் வரும் ரஜினியின் தாத்தா ரஜினி வள்ளலாக தங்க காசுகளை அள்ளி கொடுப்பார். அந்த தாத்தா நம்ம தாத்தா தான். என்னை போய் ரூம் கூட்ட விட்டுட்டாங்களே!” என்று நகைச்சுவையாக புலம்பினார். அவர் புலம்புவதை பார்த்து தாமரை செல்வி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.