பிரபல இசையமைப்பாளர்களான விவேக் மற்றும் மெர்வின் இணையில் விவேக் சிவா என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.
பரதநாட்டிய கலைஞரான சுஷ்மிதா சுரேஷ் என்பவருடன் இசையமைப்பாளர் விவேக் சிவாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்ததை, விவேக் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘வடகறி’, ‘குலேபகாவலி’, ‘மோகினி’, விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இதை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘பட்டாஸ்’ திரைப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இணை இசையமைத்து வருகின்றனர்.
இண்டிபென்டென்ட்டாக விவேக் மற்றும் மெர்வின் இசையில் வெளியான ‘ஒரசாத ..’ பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Just married !! ❤️@SushmithaSures pic.twitter.com/kO3Vl4XgKK
— Vivek Siva (@iamviveksiva) November 11, 2019