இயக்குநர் பாபு சிவனின் மறைவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் எழுத்தாளராகவும் வலம் வந்தவர் பாபு சிவன். இயக்குநர் தரணியின் உதவியாளரான இவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் இவர் விஜய்யின் குருவி மற்றும் பைரவா உள்ளிட்ட படங்களில் திரைக்கதை குழுவில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இயக்குநர் பாபு சிவன் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வேட்டைக்காரன் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''இயக்குநர் பாபு சிவனின் மறைவு செய்தியை கேட்டு, வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். ரொம்ப சாதரணமாக இருக்கும் மனிதர் அவர். எனது யோசனைகளை செயல்படுத்து, முழு சுதந்திரம் கொடுத்தார். அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என அவர் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
I am deeply saddened and shocked about the sudden demise of Vettaikaaran director Babu Sivan. He was a very simple man who gave me complete freedom to execute my ideas in Vettaikaaran. Condolences and strength to his family and friends. 🙏 pic.twitter.com/rL714vInn2
— vijayantony (@vijayantony) September 17, 2020