தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு வெளியான 'அல வைக்குந்தபுரம்லோ' (Ala vaikuntapuramlo) ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் புட்ட பொம்மா (Butta Bomma) உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் அந்த படத்தின் பாடல்களின் வெற்றி குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தளபதி விஜய் குறித்து பேசிய அவர், ''என்னோட ஒவ்வொரு ஆல்பம் வெளியாகும் போது தளபதி விஜய்யின் மேனேஜேர் அவருக்கு ரொம்ப புடிச்சதுனு சொல்லுவாரு. அப்போ நான், 'படம் கொடுங்க தலைவானு சொல்லுவேன்'.
'அவர் மேல இருக்க லவ்வ நான் எப்படி காட்ட முடியும். நீங்க ஒரு படம் கொடுத்தா தான் என்னோட லவ் எப்படினு தெரியும்'னு சொன்னன். கலாசலா பாட்டு கேட்ட ஒடனே தரணி சார் ஃபோன்ல இருந்து தளபதி பேசுனாரு. அப்போ தமன் நாம கண்டிப்பா படம் பண்றோம் எழுதி வச்சுக்கோங்கன்னாரு. ஆனா இயக்குநர் உள்ளிட்ட விஷயங்கள் ஒத்து வரணும். அவருக்கும் அந்த எண்ணம் இருக்கு. இல்லனா சொல்லிருக்க மாட்டாரு.
விஜய் சார் கூட 45 நிமிஷம் மீட்டிங் நடந்தது. அவர் என் எல்லா பாடல்களையும் பத்தி பேசுனாரு. ஏன்னா 'போக்கிரி' டைம்ல இசையமைப்பாளர் மணிஷர்மா கூட நான் வேலை பார்த்துட்டு இருந்தேன். அவருக்கு தெரியும் நான் எங்க இருந்து வந்தேனு. விஜய் சார எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரதர். 5 வயசு குழந்தைங்கள்ல இருந்து எழுபது வயசு ஆட்கள் வரை அவரோ பாடல்களை கேட்பாங்க'' என்றார்.