www.garudavega.com

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இசையமைப்பாளர் தமன்.. அவரே சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2003 ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானவர் தமன் S.

Music Director Thaman Affected from corona positive

பின்னர் தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Music Director Thaman Affected from corona positive

தமன் விஜய்யின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கிறார். அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20 படத்திலும் தமன் இசையே. இரண்டு  தினங்களுக்கு முன் தமனுடன், சிவகார்த்திகேயன், நவீன் பொலிசெட்டி, அனுதீப் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின. 

Music Director Thaman Affected from corona positive

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை டிவிட்டரில் டிவீட் மூலம் உறுதிச் செய்துள்ளார். அதில் " இரண்டு தடுப்பூசி போட்டும், முன்னெச்சரிக்கையாக இருந்தும் மெல்லிய கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. டாக்டர் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்" என டிவீட் செய்துள்ளார்.

Music Director Thaman Affected from corona positive

மற்ற செய்திகள்

Music Director Thaman Affected from corona positive

People looking for online information on SK20, Thalapathy 66, Thaman S, Vijay 66 will find this news story useful.