வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
வெற்றிமாறனின் விடுதலை
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள சூழலில், முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்திருந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய் சேதுபதி, சூரி என ஒட்டுமொத்த படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுவாக, வெற்றிமாறன் படங்கள் உருவாக்கும் எதிர்பார்ப்பை விடுதலை திரைபடத்தின் ட்ரைலரும் ஏற்படுத்தி உள்ள சூழலில், படத்தின் ரீலீஸையும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதலை படத்தில் நடித்துள்ள நடிகர் மூணார் ரமேஷ், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் மூணார் ரமேஷ்
புதுப்பேட்டை, ஆடுகளம், கும்கி, விசாரணை உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மூணார் ரமேஷ். இவர் விடுதலை படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே அவர் பிரத்யேகமாக அளித்த பேட்டியில், விடுதலை திரைப்படம் குறித்தும், தனது சினிமா அனுபவம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners
எல்லாருக்கும் ரிஸ்க் தான்..
அப்போது விடுதலை செட்டில் நடந்த விஷயங்கள் குறித்து பேசிய நடிகர் மூணார் ரமேஷ், "இயக்குனர்ல இருந்து கடைசி ஆள் வரைக்கும் எல்லாருமே ரொம்ப சிரமப்பட்டோம். லொகேஷன் போய் சேருறதே பெரிய ரிஸ்க். கார்ல போய், காரில் இருந்து ஜீப்-ல போய், ஜீப்ல இருந்து ஃபோர் வீலர் ஜீப்-ல போய் அங்க இருந்து நடந்து, அந்த மாதிரி போனும். நைட்டுன்னா குளிரு, வெளிச்சம் இல்ல. அப்புறம் அட்டை, பாம்பு, பல்லி இப்படிப்பட்ட பிரச்சனைகள்.
வண்டியில உட்கார முடியாது..
காட்டுக்குள்ள காஸ்டியூம் மாத்தி, காட்டுக்குள்ளே சாப்பிட்டு, அங்கேயே மேக்கப் போட்டு எல்லாத்தையும் நம்ம தாங்கி அவர் சொல்றதை கேட்டு நடிக்குறது ஒரு பெரிய சவாலா இருந்துச்சு. ராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் காட்டுக்குள்ள இருந்து இறங்கி வரணும். அவ்வளவு குளிரு, வண்டியில் உட்கார முடியாது. ஃபுல்லா பாறையா இருக்கும். நம்ம நடந்து போறதை விட மெதுவா தான் ஜீப் எல்லாம் போகும். இதெல்லாம் ரொம்ப பயங்கரமான அனுபவம்.
அவருகிட்ட மெனக்கெடல் இருக்கும்..
சாதாரணமாவே படம் எடுக்கக் கூடாது, அப்படின்னு இருக்கிறவர் தான் வெற்றிமாறன் சார். மெனக்கெடல் இல்லாமல் ஒரு வேலையை செய்ய மாட்டார். ரொம்ப அதிக நேரம் வேலை செய்வார். அவரும் கஷ்டப்படுவாரு, மத்தவங்களும் கஷ்டப்படுவாங்க. அதனால தான் அந்த படம் அவ்ளோ பெரிய விஷயமா இருக்கு. அதனால தான், அவரு முதல் படத்திலிருந்து இப்போ வரைக்கும் அந்த வெற்றிகளையும், எதிர்பார்ப்புகளையும் தக்க வச்சிருக்கார்" என மூணார் ரமேஷ் தெரிவித்தார்.