தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான எம் எஸ் பாஸ்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் கலைஞராக….
எம் எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றியுள்ளார். அதே போல பல மொழிமாற்றுத் திரைப்படங்களுக்கும் தன்னுடைய குரல் வளத்தால் வலுசேர்த்துள்ளார். உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஷஷாங்க் ரிடம்ஷன் படத்தில் இவர் மோர்க்ன பிரீமேனின் கதாபாத்திரத்துக்கு தமிழில் இவர் பேசிய டப்பிங் பேசி இருந்தது பெரிதும் சிலாகிக்கப்பட்டது.
திருப்புமுனையாக அமைந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா…
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொலைக்காட்சி தொடரில் இவர் நடித்த பட்டாபி என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் மாற்றப்பட்ட போதும் கடைசிவரை பட்டாபி கதாபாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கரே நடித்தார். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.
சீரியல் to சினிமா
அந்த தொடரின் வெற்றியை அடுத்து எம் எஸ் பாஸ்கருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. வந்த வேடங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பாஸ்கர் முனன்ணி நகைச்சுவை நடிகரானார். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக இயக்குனர் ராதாமோகன் இயக்கிய படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் பெரிதும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தன. தமிழகத்தின் அனைத்து வட்டார வழக்கு மொழியையும் சிறப்பாக பேசி நடிக்கும் ஒரு நடிகராக பாஸ்கர் இருக்கிறார்.
கௌரவ டாக்டர் பட்டம்…
இந்நிலையில் தற்போது எம் எஸ் பாஸ்கருக்கு International Anti corruption and Human Rights Council என்ற அமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா சமூகவலைதளத்தில் பகிர்ந்து ‘எப்போதும் அவரின் ரசிகை… நீங்கள் இதற்கும் இதற்கு மேலும் தகுதியானவர் அப்பா. டாக்டர் எம் எஸ் பாஸ்கர்’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது கவனத்தைப் பெற்று வருகிறது.