மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - அதிகாரப்பூர்வ தகவல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் ஏதோவொரு வகையில் பிரபலமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

கொரேனாவின் தாக்கம் காரணமாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் | Mohanlal's Malayalam Bigg Boss program suspend

தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அந்தந்த மொழியின் முன்னணி நட்சத்திரங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் நடத்தி வருகிறார்.

தற்போது இரண்டாவது சீசன் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அங்கேயும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இந்திய பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் தயாரிப்பு நிறுவனமான என்டேமோல்ஷைன் இந்தியா (EndemolShine India) நிறுவனம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழ்ச்சியை நிறுத்துவதாகவும் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

In light of the ongoing global health crisis, we wish for everyone to stay calm and stay safe. #LetsFightCorona

A post shared by Endemol Shine India (@endemolshineind) on

Entertainment sub editor

கொரேனாவின் தாக்கம் காரணமாக மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் | Mohanlal's Malayalam Bigg Boss program suspend

People looking for online information on Bigg boss, Coronavirus, Malayalam, Mohanlal will find this news story useful.