தெலுங்கு சினிமாவில் முன்னணி டப்பிங் கலைஞராக இருந்து வந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. இவர் பல முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
தமிழ் படங்கள் தவிர, மலையாளத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட மோகன்லால் படங்களுக்கும், கன்னட நடிகர் உபேந்திராவுக்கும், ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் படங்களுக்கும் டப்பிங் பேசி உள்ளார் ஸ்ரீனிவாச மூர்த்தி. அதே போல, ஆல வைகுண்ட புரமுலு படத்தில் நடிகர் ஜெயராமுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல நடிகர்களின் மொழி மாற்ற படங்களுக்கு டப்பிங் பேசி பிரபலமாக இருந்து வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி, சமீபத்தில் காலமானார். இவரது மறைவு, ஒட்டுமொத்த இந்திய திரை பிரபலங்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அளவில் பிரபல டப்பிங் கலைஞராக இருந்த ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவு குறித்து நடிகர் சூர்யா தனது இரங்கல்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில் மோகன்லால், விக்ரம் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரும் ஸ்ரீனிவாச மூர்த்திக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners
இது தொடர்பாக விக்ரம் பகிர்ந்த ட்வீட்டில், "எனது நண்பர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் மறைவு, அதிர்ச்சியையும் மனதை நொறுங்கும் வகையில் உள்ளது. அவரது காந்தக்குரல், தெலுங்கில் எனது கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையையும், அழகையும் அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக Aparichitudu (தெலுங்கில் அந்நியன் திரைப்படம்) பயணத்தை என்னால் மறக்கவே முடியாது. அது எப்போதுமே அன்புடன் நினைவில் இருக்கும்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Image Credit : Twitter
இதே போல மோகன்லாலின் ட்வீட்டில், "நூறு ஹீரோக்களின் குரலாக இருந்த ஸ்ரீனிவாசமூர்த்தி காருவின் மறைவு, ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. ஜனதா காரேஜில் எனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியவர், இந்த இழப்பை இன்னும் தனிப்பட்டதாக மாற்றினார். தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு ஏற்பட்ட இந்த இழப்பிற்காக துக்கப்படும் அனைவருக்காகவும் எனது மனம் உருகி போகிறது. ஓம் சாந்தி" என குறிப்பிட்டுள்ளார்.
Image Credit : Twitter
அதே போல, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், "Rest in Peace ஸ்ரீனிவாச மூர்த்தி சார். எனது தெலுங்கு பார்வையாளர்களை சென்றடைய எனக்கு அதிகாரம் அளித்த குரல்" என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Image Credit : Twitter