தமிழ், மலையாள மொழிகளில் அறியப்படும் நடிகர் மோகன்லால் கம்ப்ளீட் ஆக்டர் மற்றும் லால் ஏட்டன் என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.
தேசிய விருதுகள், கேரள மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் மற்றும் பல நல்ல அங்கீகாரங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ள ‘மோகன்லால்’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த புகழ்பெற்ற த்ரில்லர் தொடர்வரிசைப் படமான திரிஷ்யம் படத்தில் நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அண்மையில் அவர் நடித்த த்ரிஷ்யம்-2 படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மோகன்லால் தனது அடுத்த படத்திற்காக தல அஜித் பட இயக்குனருடன் இணைகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, புகைப்படத்துடன் அவரே பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘ப்ரோ டாடி’ படத்தில் தனது பகுதிகளை மோகன்லால் நடித்து முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆம், இயக்குநர் ஷாஜி கைலாஸுடன் தான் மோகன்லால் இணைகிறார். அக்டோபர் 2021-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, இந்த படத்திற்கு ராஜேஷ் ஜெயராம் திரைக்கதை எழுதியுள்ளார்.
It's with great excitement and happiness that I announce my next project with #ShajiKailas which starts rolling in Oct 2021. This film scripted by Rajesh Jayram and produced by @antonypbvr under the banner of @aashirvadcine has me and Shaji getting together after 12 long years. pic.twitter.com/WKRFlQO8sg
— Mohanlal (@Mohanlal) September 8, 2021
சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஸ், நடிகர் மோகன்லாலை இயக்குகிறார். பல்வேறு மலையாளப் படங்களை இயக்கிய ஷாஜி கைலாஸ் விஜயகாந்த் நடித்த ‘வாஞ்சிநாதன்’, அஜித் நடித்த ‘ஜனா’, ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ போன்ற தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: வேற லெவல் கொண்டாட்டம்!.. கோலாகலமா நடந்த #RC15 பட விழா! யார் வந்துருக்காங்க பாருங்க..