'லாஸ்லியா உங்க கூட மட்டும் ஏன் பேசல?' - மோகன் வைத்தியா பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவதாக வெளியேறினார் மோகன் வைத்தியா. பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் அவரை அப்பா என்றே உரிமையாக அழைத்து வந்தனர்.

Mohan Vaithiya about Losliya Kavin Kamal Haasan's Bigg Boss 3

மேலும் அவர் இயல்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் அது சமூகவலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது அவர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நான் அவர்களை அப்பா என்ற முறையில் கட்டிப்பிடித்து முத்தம் தருகிறேன். அது அவர்களுக்கு தவறாக தெரிந்தால் என்னிடம் திரும்ப வந்து பேசியிருக்கமாட்டார்கள்.

பின்னர் லாஸ்லியா மட்டும் உங்களிடம் சரியாக பேசவே இல்ல என்று கேட்டதற்கு, ஒருமுறை வெள்ளை ஷோஃபா ஒன்றை வைத்திருந்தார்கள். லோஸ்லியாவிடம் அதில் கால் வைக்காதே அழுக்காகிவிடும் என்றேன். பின்னர் அதற்கு கோவித்து சென்றாள். மத்தபடி அவளுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

'லாஸ்லியா உங்க கூட மட்டும் ஏன் பேசல?' - மோகன் வைத்தியா பதில் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mohan Vaithiya about Losliya Kavin Kamal Haasan's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Kavin, Losliya, Mohan Vaithiya will find this news story useful.