பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இதற்கடுத்து திரௌபதி என்ற படத்தையும், பின்னர் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நாடக காதலே இல்லன்னு சொல்லி".. Pa.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' குறித்து மோகன்.G
இதனையடுத்து மோகன்.G இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் 'பகாசூரன்'. இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, K.ராஜன், தாராக்ஷி, ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார் மோகன் ஜி.
சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பகாசூரன் திரைப்படம், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது. பகாசூரன் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் சூழலில், ஏராளமான சினிமா பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே, சமீபத்தில் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ளார். அதில், தனது சினிமா பயணம் குறித்து ஏராளமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பா. ரஞ்சித் திரைப்படங்கள் குறித்தும் சில கருத்துக்களை மோகன் ஜி பகிர்ந்து கொண்டார்.
அந்த சமயத்தில் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் நீங்கள் நேரடியாக பேசியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மோகன் ஜி, "இப்போ இல்ல. மெட்ராஸ் படத்துக்கு முன்னாடி பேஸ்புக்ல நிறைய Chat பண்ணி இருக்கோம். அப்புறம் காண்டக்ட் இல்ல. அவர் மெட்ராஸ்ல பண்ண சில சம்பவங்கள் பத்தி விசாரிக்குறப்போ அப்படியே அவர் வேற ரூட்ல மாறிப் போனாரு. என்னோட ரூட் வேற மாதிரி மாறி போச்சு" என தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners.
பெரிய ஹீரோக்களுடன் பணிபுரிவது குறித்து பேசி இருந்த மோகன் ஜி, "பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் கூட படம் பண்ணதுக்கப்புறம் அவரோட பிசினஸ் ரொம்ப பெருசு ஆயிடுச்சு. எனக்கு இப்பதான் செல்வா சார், நட்டி சார்ன்னு அடுத்த லெவல் போறோம். இதுக்கப்புறம் அது மாதிரி Open ஆகும். அப்படி ஆகுறப்போ காசிமேடுல இருக்கிற பிரச்சனையும், கொத்தால் சாவடி மார்க்கெட்ல எப்படி இருந்ததுன்னு எல்லாம் சொல்லணும். கதைக்கு எல்லாருமே ஃபிட்டானவங்க தான். ஹீரோஸ்னா Gigantic ஆ, Muscle ஓட இருக்கணும்ன்னு இல்ல. தனுஷ் சார் புதுப்பேட்டையில் இருக்கிற மாதிரி தான் ரவுடிங்க இருப்பாங்க. ஹீரோக்கள் யாராக இருந்தாலும் ஃபிட் பண்ணலாம் புதுசா ஒரு ஹீரோ கூட எடுத்து இதுல ஃபிட் பண்ணலாம். பட்ஜெட் தான் மேட்டர். பட்ஜெட் இருந்தா வேற கோதா இருக்குது. வெயிட் பண்ணி பாருங்க" என கூறினார்.
Also Read | "போலீஸ் படம் பாக்குறதே ஒரு தெம்பு".. பிரம்மாண்டமாக நடந்த தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா!!