நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.
முன்னதாக காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தனியாளாக தொடர்ந்து முன்னிலை வகித்த கமல்ஹாசனை பல தரப்பினரும் பாராட்டி வந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தகவல் வெளியானதுமே அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்த தொகுதியை தேர்ந்தெடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் மாலை வரை முன்னிலை வகித்து வந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் பின்னர் முன்னிலை வகிக்க தொடங்கினார். கமல் ஹாசனுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசன் 49 ஆயிரத்து 581 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்திக்க, வானதி சீனிவாசன் கமலைவிட 1500க்கும் அதிகமான வாக்குகளைன் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் இறுதிவரை வெற்றி வேட்பாளர் யாரென கணிக்க முடியாத சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது.