''ஐ! சும்மா இந்த புருடாலாம் விடாதீங்க'' - தன் மீதான எதிர்ப்புக்கு கமல் நக்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

MNM Leader Kamal Haasan clarifies his Speaks about Godse

அப்போது ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கேட்சே என்று அவர் பேசியிருந்தார்.  மேலும் இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது  தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்''என்று கமல்ஹாசன் பேசியிருந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் இத்தகைய பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கமலின் இத்தகைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சரித்திர உண்மையைச் சொன்னா புண்ணாயிடுதுனா இந்த  புண் ஆறாது. ஆத்தனும். அத ஆத்தறதுக்கு தான் நாங்க வந்துருக்கோம். நாம கூடி தான் வாழ வேண்டும். நான் ஹார்வர்டுக்கு போயிருந்த போது tolerance பத்தி பேசுங்க என்று கேட்டார்கள். எதுக்கு பேசனும்னு கேட்டேன். சகிப்புத் தன்மை அது வேணும் நமக்கு அப்போ தான் மத நல்லிணக்கம் வரும். அப்படினாங்க. அப்படிலா சகிச்சுக்குவிங்களா ஏத்துக்குவிங்களானு கேட்டேன். இன்னொரு மதத்தை சகித்துக்கொள்ளக்கூடாது ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உண்மையே வெல்லும். அதில் ஒரு உண்மை தான் சரித்திர உண்மை. இங்கு இருப்பவர்கள் என்னுடைய தீவிர அரசியல் . இன்று நான் தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன்.

தீவிரவாதி எனுவார்த்தைக்கு அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதினு சொல்லியிருக்கலாம். கொலைகாரன்னு தீவிரவாதி என்று சொல்லியிருக்கலாம். தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம் தீவிரமாக தான் பேசுவோம். சும்மா புருடாலாம் விடாதிங்க. ஏனெனில் நான் பேசுறது நிஜம்'' என்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

MNM Leader Kamal Haasan clarifies his Speaks about Godse

People looking for online information on Godse, Kamal Haasan, Makkal Needhi Maiam will find this news story useful.