எர்ணாகுளம்: டோவினோவின் வெற்றிப் பயணம் எளிதாக இல்லை. நீண்ட நாள் கடின உழைப்புக்கும், துன்பத்துக்கும் பிறகு இந்த நிலையை அடைந்துள்ளார் டோவினோ. இது குறித்த டொவினோவின் முகநூல் பதிவு வைரலாகி வருகிறது. இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியானது.
'மின்னல் முரளி'
'மின்னல் முரளி' எனும் சக்திகள் மிகுந்த அதிசய மனிதனாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து திரையிடப்படவுள்ளது.
90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ்! வினியோகஸ்தர் கொடுத்த சரவெடி UPDATE!
டோவினோ தாமஸ்
டோவினோ தாமஸ் 'மின்னல் முரளி' படத்தின் மூலம் பான் இந்திய ஸ்டாராக மாறி உள்ளார். இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக 'மின்னல் முரளி' ஆனதன் மூலம் டோவினோ தாமஸ் இந்தியா முழுவதும் ரசிகர்களின் பிரபலமாக மாறியுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு பழைய பதிவு அவரது கடந்தகால முயற்சியையும் அதன் அளவையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படுத்துகிறது.
இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் கோவா சுற்றுலா புகைப்படங்கள்!
முகநூல் பதிவு
இன்று நீங்கள் என்னை முட்டாள் என்று கேலி செய்து என்னை திறமையற்றவர் என்று முத்திரை குத்துவீர்கள். ஆனால் ஒரு நாள் நான் உயரத்தை அடைவேன். அப்போது நீங்கள் என் மீது பொறாமைப்படுவீர்கள். இது ஒரு திமிர் பிடித்தவனின் ஆணவமோ, முட்டாள்தனமான புலம்பலோ அல்ல. மாறாக, கடின உழைப்பாளியின் தன்னம்பிக்கை.'- இது ஜூன் 2011ல் ஃபேஸ்புக்கில் டொவினோ கூறிய வார்த்தைகள்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பதிவை தமிழ் ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 2012ல் சஜீவன் அந்திக்காடு இயக்கிய ‘பிரபுவின் மக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ. பின்னர், கப்பி, ஒரு மெக்சிகன் அட்வென்ச்சர், அலை, கோதா, மாயநதி மற்றும் ரயில் ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க முன்னிலை நடிகர் ஆனார் டொவினோ.