ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா மாணவர்களுடன் வாலிபால் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.
Also Read | வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்த மஞ்சிமா & கௌதம்.. வைரலாகும் UNSEEN புகைப்படங்கள்!
90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் ஜோடியாக 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரோஜா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்.
இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனையடுத்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை நடிகர் ரோஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா, சமீபத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதியில் நடைபெற்ற ஜெகன்னா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட், வாலிபால் விளையாடினார். இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சில நாட்களுக்கு முன்பு, ரோஜா அறக்கட்டளையின் கீழ், தனது சொந்த தொகுதியான நகரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளையும் எம்எல்ஏ ரோஜா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வடமலைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது சகோதரர் ராம்பிரசாத்துடன் கைப்பந்து போட்டிகளையும் ரோஜா துவங்கி வைத்தார். இந்நிலையில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளை ரோஜா துவங்கி வைத்து மாணவர்களுடன் வாலிபால் ஆடினார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, "Passion-ஐ நோக்கி முதன்மையாக செயல்பட்டால் மற்ற எல்லாம் தானாக வந்து சேரும்". என தலைப்பிட்டு வீடியோவை ரோஜா வெளியிட்டுள்ளார்.
Also Read | விஜய் சேதுபதியின் DSP படத்தில் நடிகர் விமல்.. தியேட்டரில் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்!