'காப்பான்' படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தை 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை குனீத் மோங்காவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் சர்வம் தாளமயம் புகழ் அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேசன் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். இதுகுறித்து சூர்யா குறித்து அவரது ரசிகர் ஒருவர் பெருமையாக ட்வீட் செய்திருந்தார். அதனை பகிர்ந்து பதிலளித்த அமைச்சர் கே.பாண்டியராஜன், ''எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 4000 ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வரம் தந்த சூர்யவிற்கும், அகரம் பவுண்டேசனிற்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்''என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 4000 ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வரம் தந்த @Suriya_offl க்கு ம் @agaramvision க்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் !@SuriyaFansClub #Happy10th_Anniversary#இதயத்தில்_ஈரம் https://t.co/dWPhtZLRmt
— Pandiarajan K (@mafoikprajan) December 8, 2019