அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு மிகவும் வரைலானது.
விழாவில் பேசிய விஜய், ''பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.! இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க. பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.
என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துல பேனர்லாம் வைக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வருவது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ''படம் ஓடுவதற்காகவும் போட்ட பணத்தை எடுப்பதற்காகவும் எங்கள் மீது அந்த தாக்குதல் நடைபெறுகிறது. நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கட்டும். விஜய் ஆரம்பிக்கட்டும். கவுண்டமணி, செந்தில் கூட ஆரம்பிக்கட்டும். ஒரு படத்துல நடிச்சிட்டு, சவுண்டு எஃபெக்ட் கொடுத்துட்டு ஹீரோ மாதிரி வந்தவுடனே தலைல என்ன ஏறும்னு தெரியல. வாய்க்கு வந்தபடிலாம் பேசுறாங்க. அதில் முதலில் பேசுவது அரசை பற்றித்தான் என்றார்.