அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட காஜல் அகர்வால்.. கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம்!
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் பின்னணியில் இருக்கும் ராஜ ராஜ சோழ மாமன்னன் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட குறித்த பிஹைண்ட்வுட்ஸின் பிரத்தியேக டாக்குமெண்ட்ரியில் பேசிய முன்னால் காவல் துறை உதவி- ஆணையரும், வரலாற்று ஆய்வாளருமான தஞ்சை C.இராஜமாணிக்கம், M.A பல்வேறு ஆச்சரியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், “பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. எல்லாவற்றையும் சாதித்தவர் எம்ஜியார். ஆனால் அவராலேயே பொன்னியின் செல்வன் படத்தை அவர் ஆசைப்பட்டபடி, எடுக்க முடியவில்லை. ஆனால் தாம் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன் படத்தில் எம்ஜியார், வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன் (பொன்னியின் செல்வன்) ஆகிய இரட்டை வேடங்களில் நடிக்கவும் விரும்பினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிஹைண்ட்வுட்ஸின் ஒரு பேட்டியில் பேசியிருந்த நடிகர் கார்த்தி, “அப்பாவின் 100வது படவிழாவில் பேசிய அன்றைய மக்கள் திலகம் எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் எடுக்க விருப்பப் பட்டதாகவும், அதில் அருண்மொழி வர்மன் கேரக்டரை அப்பா பண்ணவேண்டும் என்று எம்ஜிஆர் ஆசைப்பட்டதாகவும் அப்பா சொல்லியிருந்தார். ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Also Read | "ஸ்பெஷல் மீட்டிங்".. செல்வராகவன் குடும்பத்தினருக்கு Surprise கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!