சினிமா துறையைப் பற்றி சிலரிடம் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது நடிகைகளும், பெண்களும் சினிமா வாய்ப்புக்காக தகாத முறையில் கொடுமைப்படுத்தப் படுவதாக கருதுகின்றனர். அதை உண்மையாக்கும் வகையில் சமீபத்தில் மீ டூ (ME TOO) என்கிற ஹேஷ்டேக் வைரலாக பரவியது. அதில் நடிகைகளும் பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி வந்தனர்.
தற்போது ஹிந்தி நடிகை செர்லின் சோப்ரா இதுபற்றி மௌனம் கலைத்துள்ளார். சமீபத்தில் லைவ் வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். "ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலையும் போது, பல இயக்குனர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் "சரி டின்னர் சாப்பிட வருவீர்களா?" என்று கேட்பார்கள்.
நான் எத்தனை மணிக்கு என்று கேட்டால், "இரவு 11 அல்லது 12 மணிக்கு" என்று கூறுவார்கள். எனக்கு அப்போது ஒன்றும் புரியாது. நான் மறுத்துவிடுவேன். இதேபோன்று 4 அல்லது 5 சம்பவங்களுக்கு பிறகு தான் அவர்களின் நோக்கம் என்ன என்பது எனக்கு புரிந்தது. சினிமா துறையில் இந்த கொடுமைகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டியது உண்மையே" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.