இளம் வயதில் ஏற்பட்ட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரையுலகினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அவர் தனக்கு பிறக்கவிருக்கும் முதல் குழந்தையைக் கூட பார்க்காமல் மரணித்தது பெரும் துயரமாக அமைந்தது.
அவர் இறந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் ஃபோட்டோவுடன் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''அன்புள்ள சிரு... சிரு என்றால் கொண்டாட்டம். என் சிரிப்பிற்கு காரணம் சிரு.
அவர் எனக்கு அளித்தது விலைமதிப்பற்றது. எனது குடும்பம். முடிவில்லாமல் நாம் இணைந்திருப்போம். அன்பு, மகிழ்ச்சி நேர்மை என ஒவ்வொரு நாளும் நீ விரும்பியது போலவே இருக்கிறது. நாங்கள் உன்னை நேசிக்கிறோம் பேபி மா'' என்று குறிப்பிட்டுள்ளார்.