தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரங்கள் தொடர்ந்து களை கட்டி வந்தனர். வழக்கத்தை விட மாறாக இந்த தேர்தலில் பிரச்சாரங்கள் டிஜிட்டல் வடிவில் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன.
டிஜிட்டல் வடிவில் பிரச்சாரங்களை முன்னெடுப்பது சில வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது தான் என்றாலும் கூட இந்த வருடம் டிஜிட்டல் பிரச்சாரம் என்பது மிகவும் தீவிரமாக இருந்தது. யூடியூப், இணையதளம் என்று எல்லா வடிவங்களிலும் டிஜிட்டல் பிரச்சாரங்களை நன்கு பயன்படுத்திய ஒரு கட்சியில் முக்கியமான கட்சி திமுக என்று சொல்லலாம்.
குறிப்பாக ‘ஸ்டாலின் தான் வராரு’ என்கிற திமுக பிரச்சார பாடல் மிகவும் ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட தீர்மானமாக முதல்வராக ஸ்டாலின் தான் வருவார் என்பதை பதிவு செய்யும் வகையில் ‘மக்களுடைய முடிவது அதுதான்’ என்று கூறும் வகையில் உருவான இந்த பாடலுக்கு இசையமைத்த ஜெரால்டு ஃபெலிக்ஸ் Behindwoodsக்கு பிரத்தியேக பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் இந்த பாடல் உருவான விதங்கள் பற்றி பல சுவாரஸ்யமான தகவலை பதிந்திருக்கிறார்.
அவர் கூறும்போது ,“பாப் மியூசிக்கில் விருப்பம். லண்டனில் மியூசிக் படித்து, கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து பேண்ட் உருவாக்கினோம். இப்போது இசைப் பயணம் தொடர்கிறது. முதல் முறையாக ஸ்டாலின் சர் உதயநிதி அண்ணனுக்காக ஓட்டு கேட்க சேப்பாக்கம் சென்றபோது ஸ்டாலின் சாருக்கு பின்னணியில் இந்த பாடல் ஒலித்ததாகவும், அப்போது அவருக்கு மெய் சிலிர்த்ததாக ஸ்டாலின் சார் குறிப்பிட்டதாகவும் உதயநிதி சார் பகிர்ந்து கொண்டார். ஸ்டாலின் சார் பாராட்டினார்.
இதற்காக என்னை அணுகும்போது என்னுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் அதே சமயத்தில் வழக்கமான ஒன்றாக இருக்க கூடாது என நினைத்தேன். எனக்கு அதிக பொறுப்பு இருப்பதாக உணர்ந்தேன். ஒரு நிமிடத்துக்கு இந்த பாடலை கொடுத்தேன். அவர்களுக்கு பிடித்தது. இது என் முதல் பொலிடிகல் பாடல், ஸ்டாலின் சாருக்கு ஏற்கனவே ஒரு மாஸ் இருக்கிறது. இந்த பாடல் இப்படி ரீச் ஆகிறதா என ஆச்சர்யமாக தான் இருந்தது.இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் செல்ல வேண்டும் என்று எண்ணினோம். இந்த பாடலை அந்தோனி தாசன் சார் முழு எனர்ஜியோடு பாடினார். இந்த பாடலை வைத்து வந்த மாஸான மீம்ஸ்களை பார்த்தேன்.” என கூறினார்.
பின்னர் வில்லன் கடத்திப் போகும் ஹீரோயினை மீட்கச் செல்லும் ஹீரோவுக்கான பிரம்மாண்டமான காட்சிக்கான இசையை கற்பனையாக பேட்டியாளர் நவநீத் சொல்ல சொல்ல ஜெரால்டு ஃபெலிக்ஸ் வாசித்து அசத்திவிட்டார்.
ALSO READ: "பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி!".. அலறவிடும் ப்ரியா பவானி ஷங்கர்!