www.garudavega.com
iTechUS

"இந்த வருஷம் நான் பார்த்ததுலயே..".. துணிவு-ஐ பாராட்டிய வெளிநாட்டு தொழிலதிபர்...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Mayor of Ekiti Nigerian Tweet about Thunivu Movie Netflix

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

Mayor of Ekiti Nigerian Tweet about Thunivu Movie Netflix

Images are subject to © copyright to their respective owners.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Mayor of Ekiti Nigerian Tweet about Thunivu Movie Netflix

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் துணிவு படத்தினை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கண்டு களித்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபர், தமது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "இந்த வருடத்தில் நான் கண்ட மிகச் சிறந்த திரைப்படம். 10/10 புள்ளிகள் வழங்குவேன்" என ட்வீட் செய்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் துணிவு படத்தினை பார்த்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ஜூபாகோ எனும் விளையாட்டு App இணை நிறுவனராக தன்னை அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mayor of Ekiti Nigerian Tweet about Thunivu Movie Netflix

People looking for online information on Ajith Kumar, AK, Netflix, Thunivu will find this news story useful.