நடிகை மீரா மிதுன் விவகாரத்தில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் பளார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை மீரா மிதுன் ஒரு வீடியோ பதிவில், நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசினார். இதையடுத்து மீரா மிதுன் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சொல்லிய ''Ignore Negativity'' என்ற கருத்தை மேற்கோள் காட்டி அவர் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள், சஞ்சீவ் சொல்லியதை போல, இது போன்ற தரம்தாழ்ந்த விஷயத்தை Ignore செய்வதுதான் சரி என கமன்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
"IGNORE NEGATIVITY"
— Sanjeev (@SanjeeveVenkat) August 5, 2020