ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.
நிஜ ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் (படத்தில் வரும் செங்கேணி) வறுமையில் இருப்பதாக ராகவா லாரன்ஸ் Facebook வழியாக தெரிவித்திருந்தார், இந்நிலையில் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்தார். இது குறித்து பார்வதி அம்மாவை நேரடியாக சென்னை புறநகர் பகுதியில் சந்தித்தார்.பார்வதி அம்மாவை சந்தித்து வீடு கட்டித் தருவது குறித்து உறுதியளித்தார்.
பார்வதி அம்மாவுக்கும் அவரது மாற்றுத்திறனாளி மகன் குடும்பத்திற்கும் சேர்த்து முதற்கட்டமாக 3,00,000 ரூபாய் உதவி செய்தார், வரும் மார்கழி மாதம் ஆரம்பிக்கும் முன்பே வீடுகட்டும் பணிக்கான பூஜை செய்யவும், அதற்கான வேலையை துவங்கவும் உறுதியளித்தார்.