www.garudavega.com

மாஸ்டர் பட தயாரிப்பாளரும், விஜய்யின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ வீட்டில் INCOME TAX ரெய்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் மாஸ்டர்.

Master Producer and Actor Vijay Uncle Britto Income Tax Ride

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். கடந்த 2020 ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் மாஸ்டர் படம் இந்த வருடம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. இந்த படத்தை விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

Master Producer and Actor Vijay Uncle Britto Income Tax Ride

இந்நிலையில் அடையாரில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டிலும், ஆதம்பாக்கம் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்போன் நிறுவனத்துடன் ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள தொடர்பால் ரைடு என தகவல் வெளியாகி உள்ளன.  ஏற்கனவே மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் நடிகர் விஜய்யை அழைத்து சென்னையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் எந்த புகாரும் வருமான வரித்துறையால் பதியப்படவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Master Producer and Actor Vijay Uncle Britto Income Tax Ride

People looking for online information on Income tax Ride, Master, Vijay will find this news story useful.