இவர்கள் எல்லாம் எப்படி விளக்கை ஏற்றுவார்கள்? ‘மாஸ்டர்’ ரைட்டரின் கோபம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே கொரோனா எனும் கொடிய நோயின் அச்சம் காரணமாக உறைந்து போயிருக்க, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்த வரையில் ஊரடங்குச் சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 3-ம் தேதி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் அவர் கூறியது '' நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மாஸ்டர் ரைட்டரின் கோபம் | Master movie writer tweets

மேலும் , ''வரும் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள். பின்னர் டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றின் மூலம் ஒளியை பரவவிடுங்கள். இதன் மூலம்  நாம் தனிமையில் இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றாகப் போராடி வருகிறோம் என்பதை நிரூபிக்கும். ஞாயிற்றுக்கிழமை விளக்குகளை ஒளிர விடும் போது உருவாகும் பிரகாசம், கொரோனா ஏற்படுத்திய இருளை விரட்டும்'' என்று தெரிவித்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதராவாக பலர் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்., சிலர் இக்கருத்தை விமர்சித்தும் வருகின்றனர். அவ்வகையில் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் எழுத்தாளருமான ரத்னகுமார் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பது, வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ரைட்டரின் கோபம் | Master movie writer tweets

People looking for online information on Corona, Coronavirus, Rathna Kumar will find this news story useful.