விஜய்யின் மாஸ்டர் பட பிரபலத்துக்கு இன்று திருமணம் நிறைவடைந்துள்ளது.
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் படத்தின் டெக்னிக்கல் குழுவுக்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.
லோகேஷ் கனகராஜுடன் தொடக்கத்தில் இருந்து பயணித்து வருபவர் ஃபிலோமின் ராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என அத்தனை திரைப்படங்களிலும் இவரே எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் இன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர் குழுவுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். மேலும் திருமணத்தில் எடுத்த போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன், ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது.
Long time partner in crime gets hitched..😉
So happy to celebrate this day with you both! @philoedit & #dhivyapradeepa
Congrats guys! 😍 pic.twitter.com/HX76fI8jEC
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 4, 2021