புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டினருகே விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். பெற்றோர்கள் உறவினர்களின் வீடுகள் , பொது இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து சிறுமியை தேடி வந்த போது, அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள கண்மாய்க் கரையில் உடல் முழுவது காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது
இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சிறுமியின் மரணங்கள் குறித்து ஹேஷ்டேக்குடன் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநரும் மாஸ்டர் பட வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த குழந்த முக கவசம் லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய் கெடுத்து கொன்னுட்டீங்களே டா. இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அந்த குழந்த முக கவசம் லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய் 😭😭😭. கெடுத்து கொன்னுட்டீங்களே டா. 😭😭இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது.💔😭#JusticeForJayapriya pic.twitter.com/mmtZJAcYZD
— Rathna kumar (@MrRathna) July 2, 2020