BiggBossTamil5, Ciby: ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிபி கவனித்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சிபி முதல் நாளில் இருந்தே வசித்து வந்தார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் சரத்குமார் உள்ளே வந்தபோது ஒரு பணப்பெட்டியை அறிமுகப்படுத்தினார்.
பணப்பெட்டியின் பணமதிப்பு
3 லட்சம் ரூபாயில் தொடங்கிய அந்த பணப்பெட்டியில் இருந்த பணம் அடுத்தடுத்து 5 லட்சம், 7 லட்சம் மற்றும் 12 லட்சம் ரூபாய் என உயர்ந்துகொண்டே சென்றது. முன்னதாக, தான் ஜெயிக்க வாய்ப்பில்லை என்றும் எனவே பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வதாகவும் அமீர் தெரிவித்தபோது அவரை கட்டிப்பிடித்து சிபி ஊக்கப்படுத்தினார்.
அமீரின் பிராங்க் - சிபியின் மனமாற்றம்
ஆனால், தான் செய்தது ஒரு பிராங்க் என்று சொல்லி, அதன் பின்னர் கூறிய அமீர் அதிரவைத்தார். இதனைத் தொடர்ந்து சிபி, அந்த பணத்தை தான் எடுத்துப் போகவுள்ளதாக கூறத் தொடங்கினார். அதற்கு முன்னதாக தாமரையிடம், “நீ பணத்தை எடுத்துட்டு போறியா?” என்று கேட்டிருந்தார். இந்த விஷயத்தை சொல்லி ரசிகர்கள் நெகிழ்ந்தனர். அதன் பின்னர் நடிகர் சிபி பிக்பாஸ் வீட்டில் இருந்து 12 லட்சம் ரூபாயுடன் வெளியேறினார்.
மறக்க முடியாத 95 நாட்கள்
இந்நிலையில் வெளியேவந்த நடிகர் சிபி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னான தம்முடைய முதல் பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் 95 நாட்கள் பிக்பாஸில் இருந்திருக்கிறேன். இந்த 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை நான் மறக்க முடியாத ஒன்றாக பார்க்கிறேன். ரசிகர்களுக்கும், கமல் சாருக்கும், பிக்பாஸூக்கும், உடன் இருந்த அனைத்து சக போட்டியாளர்களுக்கும் நன்றி.” என்று கூறியுள்ளார்.
மக்களுக்கும் பெரிய நன்றி.
மேலும் அந்த பதிவில் பேசிய சிபி, “என் சக போட்டியாளர்கள் என் மீது அன்பு காட்டினார்கள். என்னை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு சப்போர்ட் பண்ணிய அனைத்து மக்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் இபபிக்பாஸ் வீட்டில் நான் ஒரு நல்ல எண்டர்டெயினராகவும் நல்ல மனுஷனாகவும் இருக்க முயற்சித்தேன். இப்போதும் முயற்சிக்கிறேன்.” என கூறியுள்ளார்.
Also Read: படு கிளாமரா ஆடிய சமந்தா! .. ஒரிஜினல விட வைரல் ஆகும் ‘ஓ சொல்றியா மாமா’ ரிகர்சல் வீடியோ..