இந்திய மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீட்டு வாசலில் வந்து டார்ச் லைட், மெழுகுவர்த்தி ஒளியை பரவவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன் மூலம் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம் என்பது நிரூபணமாகும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் ஒன்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பல்வேறு விதமான கருத்துக்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அவரது பதிவில், ''முதல் பதிவில் கூட்டமாக வெளியில் வராதீர்கள் என்று தெரிவித்தேன். எல்லோரும் ஒரு மதத்தை மட்டும் குறிப்பிட்டீர்கள். நான் ஏன் பாஜகவை குற்றம் சொல்ல வேண்டும். 1. நான் பிஜேபி பற்றி பேசவில்லை. 2. மதவெறி பிடிச்சவங்களே தினமும் எல்லா மதமும் ரோட்டில் கும்பலாக சுத்துது. ஒருத்தரை மட்டும் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்
1post req ppl NOT to come out in large numbers&every1 is immed connecting it to d Muslim gathering & why I’m blamin bjp?
1. i dint speak about bjp
2. Ada madhaveri pudichavangale.. everyday roadla ella madhamum gumbala suthudhu🤷🏻♂️why blame 1 section?
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 3, 2020