Jango Others
www.garudavega.com

செம்ம!! புதுமண தம்பதி சித்து & ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரொமாண்டிக் மெலோடி பாடல்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடரில் நாயகனாக நடித்தவர் சித்து. இதே தொடரில் நாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர, பிறகு திருமண நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர்.

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

நடிகர் சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.‌ இப்படி, 'திருமணம்' தொடரில் நடித்ததன் மூலம் இணைந்த இந்த க்யூட் தம்பதியினர், பல்வேறு சின்னத்திரைத் தொடர்கள் மற்றும் விளம்பர படங்களில் தனித்தனியாக நடித்து வந்த நிலையில், தற்போது வாழ்விலும் 'திருமணம்' என்கிற தொடர் பந்தத்தை தொடர உள்ளனர்.

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

தமிழ் இல்லங்களிலும் சரி, சமூக வலைப் பக்கங்களிலும் சரி, ஏராளமான மற்றும் அனைத்து தரப்பு வயதினரையும் ரசிகர்களாக கொண்டுள்ள சித்து - ஸ்ரேயா தம்பதியினரின் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.‌

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

அதன்படி, சித்து - ஸ்ரேயா திருமணம், இன்று - நவம்பர் 21-ஆம் தேதி, 2021 (ஞாயிறு)  நடந்துள்ளது. இதனிடையே நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களுக்கு நடந்த மெகந்தி பங்ஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.‌

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

ரசிகர்களை கொள்ளை கொண்ட இந்த 'ரீல் ஜோடி' டூ 'ரியல் ஜோடி'யின் திருமண பரிசாக பிரத்தியேக சிறப்பு பாடல் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் தளத்தில் ஒளிபரப்பாகிறது.

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

பிஹைண்ட்வுட்ஸ் வழங்கும் இந்த பாடலை, பிரிட்டோ ஜே.பி இயக்கியிருக்கிறார். சஞ்சய் சூரியா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்த பாடலை, சுரேந்திரன் ஜோய் எழுதி, நடனம் அமைத்துள்ளார். இவர்களுள் இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. ரியோ ராஜ் நடிப்பில் உருவான 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

"உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே.." என்று சித்துவைப் பார்த்து ஸ்ரேயா பாடும் இந்த பாடல், உருகவைக்கும் ரொமான்டிக் மெலோடி பாடலாக உருவாகி வந்திருக்கிறது.

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

இந்த பாடலில் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும், அழகிய ஒரு இள மாலை நேரத்தில் காரில் செல்கின்ற காட்சிகளை காண முடிகிறது. மெல்ல கண் பார்த்து, பழகி, சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப்பிற்கு மாறும் இவர்களின், இந்த சாலை பயணத்தில், காதலும் இவர்களுடன் சேர்ந்து பயணப்படுகிறது. இந்த பாடலின் இவர்களின் நண்பராக விஜய் டிவி விஜே பப்பு நடிக்கிறார். 

married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

நவம்பர் 21-ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் இந்த வீடியோ பாடல், அதே நாளில் திருமணம் செய்துகொள்ளும் நடிகர்கள் சித்து - ஸ்ரேயா தம்பதியருக்கு திருமண பரிசாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

செம்ம!! புதுமண தம்பதி சித்து & ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரொமாண்டிக் மெலோடி பாடல்.. வீடியோ! வீடியோ

மற்ற செய்திகள்

Married couple Sidhu Shreya Un Viral Thodugayil song video

People looking for online information on Tamil lyricsTamil lyric video songBehindwoods video songBehindwoodsTamiltamil short filmsidhu shreyasidhu shreya weddingsidhu shreya album songsidhu shreya music videobehindwoods productionbehindwoods album songthirumanam serialraja rani serialvijay will find this news story useful.