www.garudavega.com

"மாமன்னன்ல உதய் SIR-க்கு லவ் சீன் இல்லை".. "அதிக நாள் ஷூட்டிங்".. மனம் திறந்த மாரி செல்வராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படம் குறித்த தகவல்களை இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

Mari Selvaraj about Maamannan Movie with Udhayanidhi Stalin

Also Read | தனுஷின் 'கேப்டன் மில்லர்' .. இணைகிறாரா பிரபல கன்னட சூப்பர் ஸ்டார்? அடுத்தகட்ட ஷூட் எப்போ..?

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Mari Selvaraj about Maamannan Movie with Udhayanidhi Stalin

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் மாமன்னன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது.

Mari Selvaraj about Maamannan Movie with Udhayanidhi Stalin

இந்நிலையில் கலகத் தலைவன் படவிழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "உதயநிதி சார் காதல் காட்சிகளில் குழந்தையாக மாறி விடுவார். அதனால் மாமன்னன் படத்தில் காதல் காட்சிகள் வைக்கவில்லை. மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதி சார் நடித்ததில் அதிக நாள் ஷூட்டிங் செய்த திரைப்படம். அதற்கான மதிப்பு படத்தில் இருக்கும்." என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

Also Read | உதயநிதி நடிப்பில் சைக்கோ-2 வருமா..? கலகத்தலைவன் விழாவில் போட்டுடைத்த மிஷ்கின்.!

"மாமன்னன்ல உதய் SIR-க்கு லவ் சீன் இல்லை".. "அதிக நாள் ஷூட்டிங்".. மனம் திறந்த மாரி செல்வராஜ்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj about Maamannan Movie with Udhayanidhi Stalin

People looking for online information on Maamannan Movie, Mari Selvaraj, Udhayanidhi Stalin will find this news story useful.