பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் கல்யாணி குராலே ஜாதவ், சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மராத்தி தொலைக்காட்சி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (32) சனிக்கிழமை இரவு அவருடைய உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, கோலாப்பூர் நகருக்கு அருகே அவரது இருசக்கர வாகனத்தை கான்கிரீட் டிராக்டர் மோதியதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு, சாங்லி-கோலாப்பூர் சாலையில் கோலாப்பூர் நகருக்கு அருகே அவரது இரு சக்கர வாகனத்தை டிராக்டர் மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோலாப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஷிரோலி எம்ஐடிசி காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி, கோலாப்பூர் நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புனே நகரிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஹலோண்டி கிராமத்தில் இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
கோலாப்பூர் நகரில் உள்ள ராஜாராம்புரி பகுதியைச் சேர்ந்த கல்யாணி ஜாதவ், விபத்து நடந்த நாளில் உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியது. இதன் காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிராக்டரின் ஓட்டுநருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று ஷிரோலி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சாகர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா போன்ற மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் கல்யாணி ஜாதவ் நடித்துள்ளார். மராத்தி டிவி நிகழ்ச்சிகளான துஜ்யத் ஜீவ் ரங்லா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் கல்யாணி குராலே-ஜாதவ்.
விபத்துக்கு சிலமணி நேரம் முன்பு கூட தனது உணவகத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கல்யாணி பகிர்ந்துள்ளார்.